பிரதிப் தங்கை
திவ்யாவுகாக
எழுதிய கவிதைகள் உங்களுக்காக..........

10 ரூபாய் கண்மைக்கு கிடைத்த
பாக்கியம்
10000 ரூபாய் தங்கத்திற்கு
கிடைக்கவில்லை
உன் கண்களை அழகாக்க

ஒவ்வொரு பூவும்
கடவுளிடம் வரம் கேட்கிறது
உன் கூந்தலில் உயிர் பிரிய..........

என் டார்லிங்
அழகை பார்த்து பெண்ணாக
மாற வேண்டும் என
வரம் கேட்கிறது
அழகி என்னும் தமிழ் வார்த்தை......

திவ்யா என்னும்
கரு தேவதையை
இந்த மண்ணில்பிறந்ததால் தான்
காதலியை பிரிய நேர்ந்தது
அவள் தாயின் கர்ப்பபை!!!!!!!

உன் கண்ணில் கானும்
ராகத்துக்குக்கு பாட்டெழுத முடியாமல்
சிக்கி தவிக்கிறேன்
முட்டாள் கவிஞனாக.

மின்னலும் காதல் வயப்பட்டது
புன்னகையை பார்தது.........
காதலை சொல்லமுடியவில்லை
உன் கண்களை பார்த்து....

உன் சலங்கை முத்துக்கள்
சந்தோசப்படுகிறது
கடவுளிடம் சேர்ந்த மாலை போல.

ஒரு நாள் கூட என் தேவதையை
பார்க்காமல்
இருக்கு முடியாது என்று
கடவுளிடம் குறை கூறியதாம்
நிலா அம்மாவாசை அன்று!
நீ கொஞ்சும் அழகைகண்டு கடவுளும்
குழந்தையாக பிறக்க ஆசைபடுகிறார்

உன் உருவத்தை பிரிய
மனமில்லையாம்
படம் பிடித்த கேமிராவுக்கு
எல்லாம் உன் அழகு படுத்தும் பாடு

நாங்கள் தானாக விழவில்லை
உன் சீப்பு தான் பிரித்துவிட்டது
என்று கலங்குகிறது
கலைந்த கூந்தல்......
கடவுளிடம் வேண்டிக்கொள்கிறது
என் தேவதைக்கு வலிக்ககூடாது என்று
தாங்கள் உன் அழகைபார்த்து ரசிக்க வரம்
கிடைத்தாலும் உன்னை
வர்ணிக்க முடியாமல்
ஊமையாகி விட்டேன்
என்று மனம் உடைந்து போகிறது
உன் வீட்டுக் கண்ணாடி
உன் புன்னகையை அடகு வைத்துஎன் இதயத்தை வாங்கி கொண்டாய்....
கடவுளிடம் வேண்டிக் கொள்கிறேன்
கடனை அடைக்க முடியாமல்
அந்த நகை உன்னிடமே மீளட்டும் என்று
இன்று அழகாக இருக்கிறாள்இருந்தாலும் அலங்கரிக்க முடியவில்லை
என்று வருத்தப்படுகிறதாம்
உன் சுடிதார் சேலையிடம்.........
குறிப்பு:
பொக்கிசம் படம் பார்த்துவிட்டு வந்தபின்
கூறியவைகள் இவைகள் நீங்களும் முயற்சி செய்யுங்க
வருதானு பார்ப்போம்









