skip to main
|
skip to sidebar
வாழ்க்கை
Wednesday, May 27, 2009
அயல்நாட்டு வேலை
இந்திய வியர்வை துளிகளின்
மதிப்பு டாலர்களாக....
ஆனால் இந்தியன் மட்டும்
கண்ணீர்துளிகளோடு.....
அயல்நாட்டு வேலை........
திருமணம்
நரகத்தில் நிச்சயிக்கப்படும்
சொர்க்கம்.........
உணர்ந்தவர்களுக்கு......
சொர்க்கத்தில்
நிச்சயிக்கப்படும்
நரகம்..............
உணராதவர்களுக்கு.....
Monday, May 25, 2009
சூரியன்
வெட்கங்களை மட்டும்
சூடிக்கொள்ளும்
அழகு பெண் இவள்......
பக்கம் நின்று பார்த்தால்
எரித்திடும்
அழகு பெண் இவள்......
இவளின் பெயர் தான் சூரியன்.......
இவளை சுற்றியே
உலகத்தோடு நானும்
இயங்கிகொண்டுஇருக்கிறேன்.........
Friday, May 22, 2009
இல்லம்
இல்லம் கோவில்
உள்ளம் இறைவன்
நாம் தீபங்கள்
அன்பு பரவ ஏற்றுவோம்
நம்மை!!!!!!!!!!
Friday, May 15, 2009
மறக்காமல் சொல்லமுடியுதடி
நடை தளர்ந்து
குரல் குறைந்து
உணவு வெறுத்து
முதுமை சுமந்து
முடியாத பொழுதும்
மறக்காமல் சொல்லமுடியுதடி
உன் மேல் நான் கொண்ட காதலை!!!!!
Thursday, May 14, 2009
நட்பு
நட்பு என்பது
வாடா மலர்
நட்பு என்பது
ஆழமான வேர்
நட்பு என்பது
காயம்படாத இதயம்
நட்பு என்பது
கள்ளமில்லா புன்னகை
நட்பு என்பது
குழந்தையின் குறும்பு
நட்பு என்பது
வேண்டாத வரம்
நட்பு என்பது
தேயாத வளர்பிறை
நட்பு என்பது
ஆழ்கடல் முத்து
நட்பு என்பது
நீளமான வானம்
நட்பு என்பது
தாங்கும் பூமி
நட்பு என்பது
நாம்
நாம் என்பது
நல்ல நட்பு!!!!!!!!!!
Wednesday, May 13, 2009
குப்பை யார்??????
குப்பை தொட்டியில்
மாணிக்கம் தூக்கி
எறிந்த குப்பை யார்???????????
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)
என் நண்பர்கள்
என் பதிவுகள்
▼
2009
(22)
▼
August
(2)
என் அண்ணன்பிரதிப் தங்கைதிவ்யாவுகாகஎழுதிய கவிதைகள் ...
கருப்பனின் கிறுக்கல்கள்
►
June
(5)
►
May
(8)
►
April
(5)
►
March
(2)