
நெல்லுக்கும்கள்ளிப்பாலுக்கும்
தப்பிய கல்லறைக்கு
செல்லாத பெண் குழந்தை நான்
தந்தையின் அரவணைப்பும்
தாயின் அன்பும்
விரும்பா பெண் குழந்தை நான்
தம்பியின் கண்டிப்பும்
தங்கையின் நேசமும்மட்டும்
மிஞ்சிய பெண் குழந்தை நான்
காதலும் தந்த வேதனையும்
வெறுமையும் தாங்க
முடியா பெண் குழந்தை நான்
காதலனின் அன்பும்
அதற்காகவாவது வாழ வேண்டும்
என்று வாழும் பெண் குழந்தை நான்
பாசமான அண்ணனும்
ஆழமான நட்பும்
பாதுகாக்கும் பெண் குழந்தை நான்
ஏளனமும் ஏமாற்றமும்
வேண்டா வரமாய்
பெற்ற பெண் குழந்தை நான்
எழுதும் எழுத்துக்களில்
மட்டும் அமைதி
கிடைத்த பெண் குழந்தை நான்
வாழ்க்கை காற்றுக்கு
வளைந்து கொடுக்கும்
நாணலான பெண் குழந்தை நான்
நிறையாத சந்தோசங்களையும்
குறையாத துக்கங்களையும்
சுமக்கும் பெண் குழந்தை நான்
கனவிலும் கண்ணீரை
துடைக்கும் கண்களை
உடைய பெண் குழந்தை நான்.
ஆசைகளையும் ஆர்வங்களையும்
புன்னகையையும் நானே
புதைத்த பெண் குழந்தை நான்.
காலங்கள் தரும்
காயங்களுக்கு பழகி
கொண்ட பெண் குழந்தை நான்.
விடைதெரியா பல கேள்விகளோடும்
எனக்கு மட்டும் விடியாத இரவுகளோடும்
காத்திருக்கும் பெண் குழந்தை நான்.

Hey..Joe..Really I could say this It was a very touching kavithai, indeed !!! U can write a song from this...I don't know how much time u have spend 2 create such a good poem..Sure It would be some hours...Congrats dear...
ReplyDelete