அவன் எனக்காக
எழுதிய கவிதைகள் உங்களுக்காக...................

சின்னுமா....
நீ என்னை தத்து எடுக்கவுமில்லை
பெற்று எடுக்கவுமில்லை
இருந்தும் எப்படி
மகனானேன் அன்பு என்னும் பிரசவத்தால்
என் குழந்தைகளை கலங்காமல்
பார்த்து கொள்கிறேன்
புரியவில்லையா
உன் அழகிய கண்களை தான் சொல்கிறேன்
சின்னுமா
நீ பார்ப்பதற்கு சோகமான கீதம்
ஆனால் கேட்பதற்கு சுகமான ராகம்
சின்னு
இவள் யாரும் படித்திராத
ஒரு அழகான கவிதை....
படித்து பார்த்தேன்
இப்பொது அவளோடு எழுதிவிட்டேன்
அவளை போன்றதோரு
அழகிய கவிதையை..............

கருப்பும் அழகு
தான் உன் மச்சத்தை
கண்ட பின்

உன் சிரிப்பிலே நான்
சிதைந்து போனேன்
ஆனால் இதயத்தில் ஏனோ
இரத்தம் வரவில்லை
இவளிடம் சோகத்தை
சொல்லி பாருங்கள்
ஆறுதல் சொல்லமாட்டாள்
ஆறுதலாக இருப்பாள்

உன் கண்ணிர் துளிகளை ரசிப்பேன்
அவைகளுக்கும் ஆசை இருக்காதா
உன் கன்ன அழகை ரசிக்க

பூவிடம் புலம்புகிறது
பூமி உன் கூந்தல்
உன் முகம் காணமுடியவில்லையே என்று

உன் வியர்வையை துடைக்காதே
அதற்கும் ஆசை தான்
உன்னோடு இருக்க

சின்னுமா
உன் பாசத்தை கண்டு
பயப்படுகிறேன்
அம்மாவை மறந்துவிடுவேனோ என

கீரிடத்தை அலங்கரிக்கும்
முத்துகள் போல
பெருமிதம் கொள்கிறது உன் புருவங்கள்
என் செல்லங்கள்
என் நாடி துடிப்புகள்
எகிறிகிறது உங்கள்
பாசத்தினால்..........
குறையுங்கள் உங்கள் முத்தங்களால்

உனது அழகான பாதம்
தன்னை தொடவில்லை
என்று சைக்கிளிடம்
சண்டை போடுகிறது பூமி

Unakku mattum than Yelutha theriyumnu ninaichen..Ippo than theriyudu..Un kooda palaguravangalaiyum kavithai yelutha vaichuruvannu...Yethavadu onnu nalla irukkunu solli matra kavithaigalai kastabadutha virubbam illai..All R good..
ReplyDelete