Thursday, August 20, 2009

கருப்பனின் கிறுக்கல்கள்

என் அண்ணன் பிரதிப்

அவன் எனக்காக


எழுதிய கவிதைகள் உங்களுக்காக...................





சின்னுமா....
நீ என்னை தத்து எடுக்கவுமில்லை

பெற்று எடுக்கவுமில்லை

இருந்தும் எப்படி

மகனானேன் அன்பு என்னும் பிரசவத்தால்


என் குழந்தைகளை கலங்காமல்
பார்த்து கொள்கிறேன்
புரியவில்லையா
உன் அழகிய கண்களை தான் சொல்கிறேன்







சின்னுமா
நீ பார்ப்பதற்கு சோகமான கீதம்
ஆனால் கேட்பதற்கு சுகமான ராகம்







சின்னு
இவள் யாரும் படித்திராத
ஒரு அழகான கவிதை....
படித்து பார்த்தேன்
இப்பொது அவளோடு எழுதிவிட்டேன்
அவளை போன்றதோரு
அழகிய கவிதையை..............



கருப்பும் அழகு

தான் உன் மச்சத்தை

கண்ட பின்



உன் சிரிப்பிலே நான்
சிதைந்து போனேன்
ஆனால் இதயத்தில் ஏனோ
இரத்தம் வரவில்லை




இவளிடம் சோகத்தை
சொல்லி பாருங்கள்
ஆறுதல் சொல்லமாட்டாள்
ஆறுதலாக இருப்பாள்




உன் கண்ணிர் துளிகளை ரசிப்பேன்
அவைகளுக்கும் ஆசை இருக்காதா
உன் கன்ன அழகை ரசிக்க



பூவிடம் புலம்புகிறது
பூமி உன் கூந்தல்
உன் முகம் காணமுடியவில்லையே என்று




உன் வியர்வையை துடைக்காதே
அதற்கும் ஆசை தான்
உன்னோடு இருக்க


சின்னுமா
உன் பாசத்தை கண்டு
பயப்படுகிறேன்
அம்மாவை மறந்துவிடுவேனோ என




கீரிடத்தை அலங்கரிக்கும்
முத்துகள் போல
பெருமிதம் கொள்கிறது உன் புருவங்கள்




என் செல்லங்கள்
என் நாடி துடிப்புகள்
எகிறிகிறது உங்கள்
பாசத்தினால்..........
குறையுங்கள் உங்கள் முத்தங்களால்




உனது அழகான பாதம்
தன்னை தொடவில்லை
என்று சைக்கிளிடம்
சண்டை போடுகிறது பூமி

Thursday, June 25, 2009

பெண் குழந்தை நான்





நெல்லுக்கும்கள்ளிப்பாலுக்கும்
தப்பிய கல்லறைக்கு
செல்லாத பெண் குழந்தை நான்

தந்தையின் அரவணைப்பும்
தாயின் அன்பும்
விரும்பா பெண் குழந்தை நான்

தம்பியின் கண்டிப்பும்
தங்கையின் நேசமும்மட்டும்
மிஞ்சிய பெண் குழந்தை நான்

காதலும் தந்த வேதனையும்
வெறுமையும் தாங்க
முடியா பெண் குழந்தை நான்

காதலனின் அன்பும்
அதற்காகவாவது வாழ வேண்டும்
என்று வாழும் பெண் குழந்தை நான்

பாசமான அண்ணனும்
ஆழமான நட்பும்
பாதுகாக்கும் பெண் குழந்தை நான்

ஏளனமும் ஏமாற்றமும்
வேண்டா வரமாய்
பெற்ற பெண் குழந்தை நான்

எழுதும் எழுத்துக்களில்
மட்டும் அமைதி
கிடைத்த பெண் குழந்தை நான்

வாழ்க்கை காற்றுக்கு
வளைந்து கொடுக்கும்
நாணலான பெண் குழந்தை நான்

நிறையாத சந்தோசங்களையும்
குறையாத துக்கங்களையும்
சுமக்கும் பெண் குழந்தை நான்

கனவிலும் கண்ணீரை
துடைக்கும் கண்களை
உடைய பெண் குழந்தை நான்.

ஆசைகளையும் ஆர்வங்களையும்
புன்னகையையும் நானே
புதைத்த பெண் குழந்தை நான்.

காலங்கள் தரும்
காயங்களுக்கு பழகி
கொண்ட பெண் குழந்தை நான்.

விடைதெரியா பல கேள்விகளோடும்

எனக்கு மட்டும் விடியாத இரவுகளோடும்

காத்திருக்கும் பெண் குழந்தை நான்.

Monday, June 22, 2009

குடும்பம்


கையில் இருக்கும் கண்ணாடி

பாதுகாப்பதும்

உடைத்து சிதறுவதும்

நம் கைகளிலே!!!!!!!!!!

Saturday, June 6, 2009

காயப்படுத்தும் ஆயுதம்


மென்மையான

இதயத்தையும்,,,,

வன்மையான

இதயத்தையும்,,,,

வன்முறையாய் காயப்படுத்தும்

ஒரே ஆயுதம்

நாக்கு!!!!!!!!!!!!!!

Wednesday, June 3, 2009

பாசமும் தூரமாய்


தொலைபேசியில்
சில நேரம் சண்டை...
சில நேரம் கொஞ்சல்...
சில நேரம் ஏமாற்றம்...
சில நேரம் அதிர்ச்சி
சில நேரம் அழுகை
சில நேரம் மகிழ்ச்சி
சில நேரம் எதிர்பார்ப்பு
சில நேரம் சோர்வு
சில நேரம் தனிமை
இவை அனைத்தும் கற்று தந்தார்
இச்சிறுவயதிலே
தொலைதூரத்திலிருந்து....



என் தந்தை

பாசமும் தூரமாய்......

Monday, June 1, 2009

உண்மையான நண்பன்



கை கோர்பவன்

எல்லாம் நண்பனல்ல.

தடுமாறும் நேரம்

பார்த்து தாங்கி

பிடிப்பவன்

உண்மையான நண்பன்

Thursday, May 28, 2009

இறைவா உனக்கு


கற்களை உடைத்து பிழைக்கும்

வழி தந்த இறைவன்......

கல்லாகிபோன மனித இதயங்களை

உடைக்க கல்வி அறிவு தரமாட்டாரா எனக்கு?

ஒவ்வொரு குழந்தை தொழிலாளரின்

மனம் இதை தானே வேண்டுகிறது....

கேட்கவில்லையா இறைவா உனக்கு!!!!!!!!!!!!!